×

மல்லசமுத்திரத்தில் ₹2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், மே 3: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 125 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர்.

இதில் பி.டி ரகம் பருத்தி குவிண்டால் ₹7,270 முதல் ₹8,210 வரையிலும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,800 முதல் ₹4,820 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 125 மூட்டை பருத்தி ₹2.50 லட்சத்திற்கு ஏலம் போனது.

The post மல்லசமுத்திரத்தில் ₹2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamudra ,Mallasamuthram ,Thiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,Salem ,Erode ,Tirupur ,Coimbatore… ,
× RELATED ₹3 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்